Friday, May 22, 2009

10: பெரிய எண்களை 9ஆல் வகுத்தல்

221013 / 9 = ?
உங்களுக்கு ஒரு சவால். கால்குலேட்டரின் உதவியின்றி ஆறு வினாடிகளில் இந்தக் கணக்கின் விடையைக் கூற முடியுமா? முடிந்தால் நீங்கள் ஒரு கணக்குப் புலி. முடியாவிட்டால் இருக்கவே இருக்கு நம்ம மின்னல் கணிதம்.

221013 / 9 = ?
எப்பவுமே இடது பக்க முதல் எண்ணை அப்படியே எழுத வேண்டும்.

அடுத்து 2+2 = 4
அடுத்து 4+1 = 5
அடுத்து 5+0 = 5

அடுத்து 5+1 = 6
அடுத்து 6+3 = 9
9 அல்லது அதற்கு மேல் கூட்டுத் தொகை வந்துவிட்டால், நாம் அதிலிருந்து 9ஐ கழிக்க வேண்டும்.
நாம் 9ஐ 9லிருந்து 1முறை கழிப்பதால் அந்த 1ஐ முந்தைய இலக்கும் 6உடன் கூட்ட வேண்டும்.
ஆக ஈவு 24557. மீதி 0.
புரிவதற்கு எளிதாக இருக்கட்டுமே என்று நான் படம் வரைந்து விளக்கியிருக்கிறேன். நீங்கள் படம் வரைந்து நேரத்தை வீணாக்காதீர்கள். மனக் கணக்காகவே போடுங்கள். எப்போதுமே இடது பக்கத்திலிருந்து துவங்குங்கள்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். உண்மையில் இது ஒரு வகுத்தல் கணக்கு. ஆனால் இந்தக் கணக்கில் எங்குமே நாம் வகுக்கவில்லை. ஒரே ஒரு இடத்தில் கழித்தல், மற்றவை எல்லாமே கூட்டல்தான். ஆக கூட்டலும், கழித்தலும் தெரிந்தால் போதும். எந்த எண்ணையும் 9ஆல் எளிதாக வகுத்துவிடலாம்.

இந்த உத்தியை நான் ஏற்கனவே சொன்னது போல மனக்கணக்காக பழகினால் 6 வினாடிகளுக்கு முன்னதாகவே நீங்கள் விடையைக் கூற முடியும். இது சவடால் அல்ல! சவால்! முயற்சி செய்து பழகுங்கள். நண்பர்களிடம் சவால் விட்டு அசத்துங்கள்.

5 comments:

Menaga Sathia said...

superrrrrr!!

asfar said...

Excellent, nice technical point, we wait more with you
greating..

KARTHIK said...

ஹலோ பாஸ் கலக்குறீங்க..தொடரட்டும் உங்கள் சேவை..வாழ்த்துக்கள்..

வடுவூர் குமார் said...

வாவ்! அருமை.

மங்களூர் சிவா said...

Excellent