இதனை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவை எல்லாம் அதே உத்திதான்.
அதாவது 100க்கு அருகில் உள்ள எண்களுக்கு எந்த உத்தியை பயன்படுத்தினோமோ, அதையே செய்துவிட்டு, இரண்டால் வகுத்துவிட வேண்டும். ஒரு உதாரணத்தை பார்க்கலாமா?
உதாரணம் -1
63
67 X
--------
4221
--------
குறிப்பு :-
- அடிப்படை எண் 50
- இரு எண்களுமே 50ஐ விட பெரிய எண்கள் என்பதால் அந்த எண்களில் இருந்து 50ஐ கழிக்கப்போகின்றோம்
- அடிப்படை எண் 50
- 63லிருந்து 50ஐ கழித்தால் +13
- 67லிருந்து 50ஐ கழித்தால் +17
- 13ஐயும் 17ஐயும் பெருக்கினால்
விடை 13X17 = 221.
இது விடையின் முதல் பகுதி. - 63டன் 17ஐ கூட்டினால் 63+17 = 80.
அல்லது
67டன் 13ஐ கூட்டினால் 67+13 = 80.
- 80ஐ 100ஆல் பெருக்குங்கள்.
80 x 100 = 8000 - 2ஆல் வகுங்கள்.
8000 / 2 = 4000
இது விடையின் இரண்டாம் பகுதி - இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
4000 + 221 = 4221
இதுதான் விடை
65
69 X
--------
4485
--------
- அடிப்படை எண் 50
- இரு எண்களுமே 50ஐ விட பெரிய எண்கள் என்பதால் அந்த எண்களில் இருந்து 50ஐ கழிக்கப்போகின்றோம்
- அடிப்படை எண் 50
- 65லிருந்து 50ஐ கழித்தால் +15
- 69லிருந்து 50ஐ கழித்தால் +19
- 15ஐயும் 19ஐயும் பெருக்கினால்
விடை 15X19 = 285.
இது விடையின் முதல் பகுதி. - 65டன் 19ஐ கூட்டினால் 65+19 = 84.
அல்லது
69டன் 15ஐ கூட்டினால் 69+15 = 84.
- 84ஐ 100ஆல் பெருக்குங்கள்.
84 x 100 = 8400 - 2ஆல் வகுங்கள்.
8400 / 2 = 4200
இது விடையின் இரண்டாம் பகுதி - இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
4200 + 285 = 4485
இதுதான் விடை
உதாரணம் - 3
42
48X
--------
2016
--------
- அடிப்படை எண் 50
- இரு எண்களுமே 50ஐ விட சிறிய எண்கள் என்பதால் 50ல் இருந்துஅந்த எண்களை கழிக்கப்போகின்றோம்
- அடிப்படை எண் 50
- 50லிருந்து 42ஐ கழித்தால் 8
- 50லிருந்து 48ஐ கழித்தால் 2
- 8ஐயும் 2ஐயும் பெருக்கினால்
விடை 8X2 = 16.
இது விடையின் முதல் பகுதி. - 42லிருந்து 2ஐ கழித்தால் 42-2 = 40.
அல்லது
48லிருந்து 2ஐ கழித்தால் 48-8 = 40.
- 40ஐ 100ஆல் பெருக்குங்கள்.
40 x 100 = 4000 - 2ஆல் வகுங்கள்.
4000 / 2 = 2000
இது விடையின் இரண்டாம் பகுதி - இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
2000 + 16 = 2016
இதுதான் விடை
உதாரணம் - 4
44
49X
--------
2156
--------
- அடிப்படை எண் 50
- இரு எண்களுமே 50ஐ விட சிறிய எண்கள் என்பதால் 50ல் இருந்துஅந்த எண்களை கழிக்கப்போகின்றோம்
- அடிப்படை எண் 50
- 50லிருந்து 44ஐ கழித்தால் 6
- 50லிருந்து 49ஐ கழித்தால் 1
- 6ஐயும் 1ஐயும் பெருக்கினால்
விடை 6 X 1 = 6.
இது விடையின் முதல் பகுதி. - 44லிருந்து 1ஐ கழித்தால் 44 - 1 = 43.
அல்லது
49லிருந்து 6ஐ கழித்தால் 49 - 6 = 43.
- 43ஐ 100ஆல் பெருக்குங்கள்.
43 x 100 = 4300 - 2ஆல் வகுங்கள்.
4300 / 2 = 2150
இது விடையின் இரண்டாம் பகுதி - இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
2150 + 6 = 2156
இதுதான் விடை
உதாரணம் - 5
59
48X
--------
2832
--------
- அடிப்படை எண் 50
- 59 என்பது அடிப்படை எண் 50ஐ விட பெரிய எண்.
எனவே 59 - 50 = 9
48 என்பது அடிப்படை எண் 50ஐ விட சிறிய எண்
எனவே 48 - 50 = - 2
- அடிப்படை எண் 50
- 59லிருந்து 50ஐ கழித்தால் 9
- 48லிருந்து 50ஐ கழித்தால் -2
- 9ஐயும் -2வையும் பெருக்கினால்
விடை 9 X -2 = -18.
இது விடையின் முதல் பகுதி. - 48டன் 9ஐ கூட்டினால் 48 + 9 = 57.
அல்லது
59டன் -2வை கூட்டினால் 59 + (-)2 = 57.
- 57ஐ 100ஆல் பெருக்குங்கள்.
57 x 100 = 5700 - 2ஆல் வகுங்கள்.
5700 / 2 = 2850
இது விடையின் இரண்டாம் பகுதி - இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
2850 + (-18) = 2832
இதுதான் விடை
- மைனசும் பிளஸ்சும் சேர்ந்தால் அது மைனஸ் ஆகிவிடும்.
உதாரணமாக : 2850 + (-18) = 2850 - 19 = 2832
63 x 52 = ?
48 x 53 = ?
61 x 47 = ?
54 x 66 = ?
69 x 43 = ?
56 x 46 = ?
8 comments:
direct கணக்கே தல சுத்தும் இதுல இப்டி கூட்னோம் அப்டி பிரிச்சு கூட்னோம்மன்னா.. விடுங்க சார்.. அந்த ரைட்ல இருக்கற கால்குலேட்டர் யுஸ் பன்னிக்கேறேன் :)
/
D.R.Ashok said...
direct கணக்கே தல சுத்தும் இதுல இப்டி கூட்னோம் அப்டி பிரிச்சு கூட்னோம்மன்னா.. விடுங்க சார்.. அந்த ரைட்ல இருக்கற கால்குலேட்டர் யுஸ் பன்னிக்கேறேன் :)
/
ஹிஹி
இது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு
:)))
மங்களுர் சிவா தேங்ஸ்ப்பா
ம்ம்ம் எளிமையாக இருப்பது போல் தோன்றுகிரது -ஆனால் நேரடியாக்ப் பெருக்குவது இன்னும் எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்
பழக்கம் தான் காரணம்
நல்வாழ்த்துகள்
master 10th appuram naan ure science group
so enna vitudunggggggggggggga
theriyama vanthuten
சார்.. நேர பெருக்குறதே ஈசி ன்னு நெனைக்கிறேன்..
ரெண்டு பெருக்கல், ரெண்டு கூட்டல் பண்ற நேரத்துல, கொஞ்சம் பெருசா இருந்தாலும் ஒரு பெருக்கல போட்டுட்டு போயிடலாம். ஆனாலும் நீங்கள் கொடுத்த விதம் அருமை..
நன்றி..
Thala suthuthu sir.
Unga appa oru nagaichuvai nadigara?
M.G.R padathula nadichirukkaarunu
ninaikkiren. correct?
மிக இலகுவாக இருக்கிறது. இனி தொடர்ந்து இதை நடைமுறைப்படுத்திப் பார்க்க இருக்கிறேன்..நன்றி நண்பரே !
Post a Comment