Tuesday, November 11, 2008

02. 11ஆல் பெருக்குதல் - இரு இலக்க எண்கள்

மின்னல் கணிதம்னு சொல்றீங்களே... உண்மையிலேயே மின்னல் வேகத்தில் போட முடியுமா?
சந்தேகப்படறதை விட்டுட்டு அடுத்த வரியை கவனிங்க.

62 x 11 = ?
  • வலது இலக்கம் 2. இடது இலக்கம் 6
  • வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 2 + 6 = 8
  • விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 6 8 2
    என்னது விடை வந்திருச்சா? அப்படின்னு ஆச்சரியப்படாதீங்க. வேணும்னா கால்குலேட்டரை எடுத்து செக் பண்ணிப் பாருங்க. ஆச்சரியம் அதிகமாகணும்னா அடுத்த உதாரணத்தையும் பாருங்க.

    81 x 11 = ?
    • வலது இலக்கம் 1. இடது இலக்கம் 8
    • வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 8 + 1 = 9
    • விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 8 9 1
      என்னடா இது விரல் சொடுக்கறதுக்குள்ள விடை வருதேன்னு ஆச்சரியமா இருக்கா. இன்னும் பல ஆச்சரியங்கள் உங்களுக்கு இருக்கு. அதுக்கு முன்னாடி இன்னொரு உதாரணம்.

      54 x 11 = ?
      • வலது இலக்கம் 4. இடது இலக்கம் 5
      • வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 4 + 5 = 9
      • விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 5 9 4
      நொடிகளில் விடை, இதுதான் மின்னல் கணிதம். உதாரணங்கள் போதும்னு நினைக்கிறேன். இனிமே நீங்களே முயற்சி பண்ணுங்க

      13 x 11 = ?
      26 x 11 = ?
      35 x 11 = ?
      44 x 11 = ?
      53 x 11 = ?
      62 x 11 = ?
      70 x 11 = ?
      52 x 11 = ?
      61 x 11 = ?
      36 x 11 = ?
      25 x 11 = ?
      17 x 11 = ?

      இந்த கணக்குகளை எல்லாம் நான் மேலே சொல்லியிருக்கிற முறைப்படி செய்து பாருங்க. நொடியில விடை சொல்லி மத்தவங்களையும் ஆச்சரியப்படுத்துங்க.

      முக்கிய பின்குறிப்பு : சில எண்களின் இடது வலது இலக்கங்களை கூட்டினால் பத்து அல்லது அதை விட பெரியதாக இருக்கும். உதாரணமாக 28, 29, 39, 46 . . . . அந்த எண்களை 11ஆல் பெருக்க வேறு ஒரு உத்தி இருக்கிறது. அதை பின்னர் சொல்கிறேன்.

      அடுத்து ஐந்தில் முடியும் எண்களை அதே எண்களால் பெருக்குவது

      5 comments:

      யூர்கன் க்ருகியர் said...

      வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டி பத்து அல்லது பத்திற்கு மேல் வந்தால் உங்களின் முறை வேலை செய்ய மாட்டேன் என்கிறது.

      உதாரணம் 19,28,29,37,38,39,46,47...49,55,56..59,64,65..69,73,74...79,82,83...89,91,92....99,

      ISR Selvakumar said...

      ஜீர்கேன் க்ருகேர்,

      வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டி பத்து அல்லது பத்திற்கு மேல் வந்தால், நான் குறிப்பிட்டிருக்கும் முறை சரிவராது.

      உதாரணம் 19,28,29,37,38,39,46,47...49,55,56..59,64,65..69,73,74..

      இவற்றை எப்படி 11ஆல் பெருக்குவது என்பதை தனிப் பதிவாக வெளியிட உள்ளேன்.

      தங்கள் கருத்துக்கு நன்றி!

      ஆட்காட்டி said...

      கூட்டுறதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன்.

      ISR Selvakumar said...

      வருகைக்கு நன்றி ஆட்காட்டி!
      மிக விரைவில் மின்னல் கூட்டல் வரும்!

      பாலராஜன்கீதா said...

      //வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டி பத்து அல்லது பத்திற்கு மேல் வந்தால் உங்களின் முறை வேலை செய்ய மாட்டேன் என்கிறது.

      உதாரணம் 19,28,29,37,38,39,46,47...49,55,56..59,64,65..69,73,74....//
      அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டினால் வரும் எண்ணின் (அது 10லிருந்து 18வரைதான் இருக்கும்) வலதுகோடியில் இருக்கும் எண்ணை நடுவில் போட்டுக்கொள்ளவும்.
      பிறகு முதலில் எடுத்துக்கொண்ட எண்ணின் இடது ஓரத்தில் இருக்கும் எண்ணுடன் ஒன்றை கூட்டி விடையில் இடது பக்கத்தில் எழுதிக்கொள்ளவும். எடுத்துக்காட்டாக 58 x 11 என்றால்
      முதலில் வலது கோடியில் 8
      5 + 8 = 13
      8ன் இடப்பக்கத்தில் 3 ஐ எழுதிக்கொள்ளவும்.
      பிறகு 5 + 1 = 6ஐ மேற்கூறிய 3ன் இடது பக்கத்தில் எழுதிக்கொள்ளவும்.
      விடை 638.

      இதேபோல் முதலில் எடுத்துக்கொண்ட எண் இரண்டு இலக்கங்களைவிட அதிகமாக இருந்தாலும் அதை 11ஆல் பெருக்கினால் வரும் விடையை எளிதில் எழுத வழி உள்ளது. அதை வலைப்பதிவர் செல்வகுமார் அவர்களே பிறகு எழுதுவார்.