Tuesday, December 2, 2008

05. மின்னல் கழித்தல் - 1

100, 1000, 10000, 100000, 1000000, 10000000
இந்த எண்களிலிருந்து சுலபமாக கழிப்பது எப்படி?

"உன் கையில 10 சாக்லேட் இருக்கு. 5 நான் எடுத்துக்கறேன். மீதி எத்தனை இருக்கும்?"
"மீதி எதுவும் இருக்காது சார்?"
"ஏன்?"
"ஏன்னா மீதியை நான் சாப்பிட்டுவிடுவேனே?"

கழித்தல் கணக்கு பற்றிய நிரந்தரமான, ஜாலியான ஜோக் இது. இப்போ நான் சொல்லித் தரப்போற உத்தி இந்த ஜோக்கை விட ஜாலியானது. எளிதானது.

எல்லாமே ஒன்பதிலிருந்து. கடைசி மட்டும் 10லிருந்து. இந்த மின்னல் மந்திரத்தை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் கண் மூடித் திறப்பதற்குள் பின்வரும் கழித்தல் கணக்குகளை போட்டுவிடலாம்.

1000 - 326
  • ஆயிரத்தை விட்டு விடுங்கள்
  • 326ல் கடைசி இலக்கம் (வலது இலக்கம்) 6. அதை பத்திலிருந்து கழித்தால் 4.
  • 2ஐ 9லிருந்து கழித்தால் 7
  • 3ஐ 9லிருந்து கழித்தால் 6
  • 674 இதுதான் விடை.
அட! நல்லா இருக்கே. இன்னொரு உதாரணம் ப்ளீஸ்!

10000 - 7492
  • பத்தாயிரத்தை விட்டு விடுங்கள்
  • 7492ல் கடைசி இலக்கம் (வலது இலக்கம்) 2.அதை பத்திலிருந்து கழித்தால் 8.
  • 9ஐ 9லிருந்து கழித்தால் 0
  • 4ஐ 9லிருந்து கழித்தால் 5
  • 7ஐ 9லிருந்து கழித்தால் 2
  • 2508 இதுதான் விடை.
"மின்னல் கணிதம், மின்னல் மாதிரியே வேகமா இருக்கு சார்" அப்படின்னு ஒருத்தர் எனக்கு மின்னஞ்சல் பண்ணியிருந்தார்.
"ரொம்ப வேகம்னு சொல்றதை விட ரொம்ப எளிது சார்" அப்படின்னு இன்னொரு நண்பர் எனக்கு எழுதியிருந்தார்.
நான் என்ன சொல்றேன்னா, வேகம் + எளிமை = மின்னல் கணிதம்.
சரி இப்போ இன்னொரு உதாரணம் பாரக்கலாம்.

100000 - 86514
  • ஒரு இலட்சத்தை விட்டு விடுங்கள்
  • 86514ல் கடைசி இலக்கம் (வலது இலக்கம்) 4.அதை பத்திலிருந்து கழித்தால் 6.
  • 1ஐ 9லிருந்து கழித்தால் 8
  • 5ஐ 9லிருந்து கழித்தால் 4
  • 6ஐ 9லிருந்து கழித்தால் 3
  • 8ஐ 9லிருந்து கழித்தால்1
  • 13486 இதுதான் விடை.
இப்போ நீங்க என்ன பண்றீங்கன்னா . . . ஆஹா ஓஹோன்னு அதிசயப்படறதை நிறுத்திட்டு நல்லா பயிற்சி பண்ணுங்க. 'கணக்குப்புலி வந்தாச்சுன்னு' மத்தவங்க உங்களைப் பார்த்து வியக்க வையுங்க.

100 - 68 = ?
100 - 23 = ?
100 - 59 = ?
1000 - 79 = ?
1000 - 34 = ?
1000 - 61 = ?
1000 - 661 = ?
1000 - 783 = ?
1000 - 209 = ?
10000 - 45 = ?
10000 - 71 = ?
10000 - 528 = ?
10000 - 108 = ?
10000 - 945 = ?
10000 - 1256 = ?
10000 - 7478 = ?
10000 - 2007 = ?

விசித்திர எண்கள்
2519 : இந்த எண்ணை 2லிருந்து 10 வரை உள்ள எண்களால் தனித் தனியே வகுத்தால், கிடைக்கின்ற விடை படு சுவாரசியம்.

2519 / 2 = 1
2519 / 3 = 2
2519 / 4 = 3
2519 / 5 = 4
2519 / 6 = 5
2519 / 7 = 6
2519 / 8 = 7
2519 / 9 = 8
2519 / 10 = 9
2519 / 2 = 10

6 comments:

அன்புடன் அருணா said...

wow....excellent...good post.I've read only this ...I'l come again after reading all the posts.
anbudan aruna

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.com

பாலராஜன்கீதா said...

//2519 : இந்த எண்ணை 2லிருந்து 10 வரை உள்ள எண்களால் தனித் தனியே வகுத்தால், கிடைக்கின்ற விடை படு சுவாரசியம்.//
தனியே வகுத்தால், கிடைக்கும் "மீதி" (remainder) என்று மாற்றினால் சரியாக இருக்கும்.

பாலராஜன்கீதா said...

//2519 : இந்த எண்ணை 2லிருந்து 10 வரை உள்ள எண்களால் தனித் தனியே வகுத்தால், கிடைக்கின்ற விடை படு சுவாரசியம்.//
ஏனெனில் 2519+1 = 2520 என்ற எண் 2, 3, 4. 5. 6. 7, 8, 9 எண்களின் அதமப் (மீச்சிறு?) பொது மடங்கு ( least common multiple )

ISR Selvakumar said...

நன்றி அருணா,
மீண்டும் வாருங்கள். படித்ததை மற்றவர்களுடன் குறிப்பாக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

ISR Selvakumar said...

நன்றி அருணா,
மீண்டும் வாருங்கள். படித்ததை மற்றவர்களுடன் குறிப்பாக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்