Tuesday, March 10, 2009

06. பெருக்கல் - ஓரிலக்க எண்கள்

அனைவருக்கும் மனப்பாடமாக பத்தாவது வாய்ப்பாடு வரை சொல்லத் தெரியும். ஆனால் வாய்ப்பாடு மறந்து விட்டால் என்ன செய்வது? கவலையே வேண்டாம். நான் சொல்லித் தரப்போகிற இந்த உத்தி உங்கள் வாய்ப்பாடு மனப்பாடப் பிரச்சனையை தீர்த்து வைக்கும்.

ஓரிலக்க எண்கள் அனைத்தும் பத்துக்கு கீழே உள்ள எண்கள். எவ்வளவு கீழே அல்லது அருகில் உள்ளன என்பதை வைத்துதான் நாம் இந்தக் கணக்குகளை போடப் போகிறோம்.

முதல் உதாரணம் : 7 x 8

  • முதல் எண் ஏழு. இது பத்தில் இருந்து எவ்வளவு குறைச்சல். 10 - 7 =3
  • அடுத்த எண் எட்டு. இது பத்தில் இருந்து எவ்வளவு குறைச்சல். 10 - 8 =2
  • இனி விடைகளை பெருக்குங்கள். 3 x 2 = 6. இது விடையின் இரண்டாவது பகுதி
  • எட்டில் இருந்து மூன்றை கழியுங்கள் 8 - 3 = 5. அல்லது ஏழில் இருந்து இரண்டை கழியுங்கள் 7-2 = 5. இரண்டிற்கும் ஒரே விடைதான் 5. இது விடையின் முதல் பகுதி
  • அதாவது 56
இரண்டாவது உதாரணம் : 9 x 6
  • முதல் எண் ஒன்பது. இது பத்தில் இருந்து எவ்வளவு குறைச்சல். 10 - 9 = 1
  • அடுத்த எண் ஆறு. இது பத்தில் இருந்து எவ்வளவு குறைச்சல். 10 - 6 = 4
  • இனி விடைகளை பெருக்குங்கள். 1 x 4 = 4. இது விடையின் இரண்டாவது பகுதி
  • ஒன்பதில் இருந்து ஒன்றை கழியுங்கள் 9 - 4 = 5. அல்லது ஆறில் இருந்து ஒன்றை கழியுங்கள் 6-1 = 5. இரண்டிற்கும் ஒரே விடைதான் 5. இது விடையின் முதல் பகுதி
  • அதாவது 54

மூன்றாவது உதாரணம் : 7 x 9
  • முதல் எண் ஏழு. இது பத்தில் இருந்து எவ்வளவு குறைச்சல். 10 - 7 =3
  • அடுத்த எண் ஒன்பது. இது பத்தில் இருந்து எவ்வளவு குறைச்சல். 10 - 9 =1
  • இனி விடைகளை பெருக்குங்கள். 3 x 1 = 3. இது விடையின் இரண்டாவது பகுதி
  • ஏழில் இருந்து ஒன்றை கழியுங்கள் 7 - 1 = 6. அல்லது ஒன்பதில் இருந்து மூன்றை கழியுங்கள் 9-3 = 6. இரண்டிற்கும் ஒரே விடைதான் 6. இது விடையின் முதல் பகுதி
  • அதாவது 63
குறிப்பு
ஐந்து மற்றும் அதற்கு கீழே உள்ள எண்களுக்கு இந்த முறையை பயன்படுத்தாதீர்கள். அது எறும்பைச் சுமக்க யானையை அழைத்து வந்த கதையாகிவிடும்.

பயிற்சி கணக்குகள்
9 x 9 8 x 9 8 x 8
7 x 7 5 x 9 8 x 7

விசித்திர எண்கள்
சில எண்கள் விசித்திரமானவை. அவற்றை இரசிக்க ஆரம்பித்துவிட்டால் கணக்குப் பாடத்தை இரசிக்க ஆரம்பித்துவிடலாம்.
6680 = 6666 + 6 + 8 + 0.
6681 = 6666 + 6 + 8 + 1.
6682 = 6666 + 6 + 8 + 2.
6683 = 6666 + 6 + 8 + 3.
6684 = 6666 + 6 + 8 + 4.
6685 = 6666 + 6 + 8 + 5.
6686 = 6666 + 6 + 8 + 6.
6687 = 6666 + 6 + 8 + 7.
6688 = 6666 + 6 + 8 + 8.
6689 = 6666 + 6 + 8 + 9.

1 comment:

Tech Shankar said...

பட்டையைக் கிளப்புறீங்க வாத்தியாரே.

கலக்குங்க.

தொடர்ந்து வெளியிட்டு மாபெரும் சாதனை புரியுங்கள்.

வாழ்த்துகள்