முதல் உதாரணம் : 96 x 97
- முதல் எண் 96. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 96 =4
- அடுத்த எண் 97. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 97 = 3
- இனி விடைகளை பெருக்குங்கள். 4 x 3 = 12. இது விடையின் இரண்டாவது பகுதி
- இப்போது 96ல் இருந்து மூன்றை கழியுங்கள் 96 - 3 = 93. அல்லது 97ல் இருந்து நான்கை கழியுங்கள் 97-4 = 93. இரண்டிற்கும் ஒரே விடைதான் 93. இது விடையின் முதல் பகுதி
- அதாவது 9312
- முதல் எண் 98. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 98 =2
- அடுத்த எண் 92. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 92 = 8
- இனி விடைகளை பெருக்குங்கள். 2 x 8 = 16. இது விடையின் இரண்டாவது பகுதி
- இப்போது 98ல் இருந்து எட்டை கழியுங்கள் 98 - 8 = 90. அல்லது 92ல் இருந்து இரண்டை கழியுங்கள் 92-2 = 90. இரண்டிற்கும் ஒரே விடைதான் 90. இது விடையின் முதல் பகுதி
- அதாவது 9016
- முதல் எண் 96. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 96 =4
- அடுத்த எண் 99. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 99 = 1
- இனி விடைகளை பெருக்குங்கள். 4 x 1 = 5. ஐந்தை 05 எனக் குறித்துக் கொள்ளுங்கள். இது விடையின் இரண்டாவது பகுதி
- இப்போது 96ல் இருந்து ஒன்றை கழியுங்கள் 96 - 1 = 95. அல்லது 99ல் இருந்து நான்கை கழியுங்கள் 99-4 = 95. இரண்டிற்கும் ஒரே விடைதான் 95. இது விடையின் முதல் பகுதி
- அதாவது 9505
இந்தப் முறையில் 95க்கு மேல் 100க்கு கீழே உள்ள எண்களை எளிதாக பெருக்கலாம். அப்போ மற்ற எண்களுக்கு என்ன செய்வதாம் என நீங்கள் கேட்பது புரிகிறது. காத்திருங்கள் விரைவில் அந்த உத்தியையும் சொல்லித் தருகிறேன்.
பயிற்சி எண்கள்
96 x 96 98 x 94 97 x 95 97 x 94
95 x 95 98 x 92 98 x 95 97 x 93
விசித்திர எண்கள்
6327. இந்த எண்ணை பார்க்கும் போதெல்லாம் எனக்கு வெஜிடபிள் சாண்ட்விட்ச் ஞாபகம் வரும். ஏன் தெரியுமா? நாள் சமோசா சாப்பிடும்போது, எக்மோர் அல்சாமா அருகில் வெஜிடபிள் சாண்ட்விட்ச் சுற்றிய காகிதத்தில் இந்த சுவாரசியமிருந்தது. எனக்கு சாண்ட்விட்சின் சுவையும் மறக்கவில்லை, 6327ன் சுவாரசியமும் மறக்கவில்லை.
6327 = 324 + 325 + . . . + 342 = 343 + 344 + . . . + 360.
9 comments:
ரொம்ப நன்றி ..அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்
joe
99*99 = 9801 தான் வரும்
100 - 99 = 1
100 - 99 = 1
1*1 = 1
99 - 1 = 98
so...9801
நல்ல உபயோகமான தகவல்.
நன்றி..
வேர்ட் வெரிபிகேஷனை நீக்கி விடவும்
The third example is incorrect, is what I wanted to say.
96 * 99 = 9504
Kanna,
Thanks for pointing it out.
96*99 = 9804.
100 - 99 = 1
இனி விடைகளை பெருக்குங்கள். 4 x 1 = 5. ஐந்தை 05 எனக் குறித்துக் கொள்ளுங்கள்.
இது எப்படி வந்தது? புரியவில்லை.
100 - 99 = 1
இனி விடைகளை பெருக்குங்கள். 4 x 1 = 5. ஐந்தை 05 எனக் குறித்துக் கொள்ளுங்கள்.
இது எப்படி வந்தது? புரியவில்லை.
kaniyuri@gmail.com
Post a Comment