Tuesday, March 10, 2009

07. பெருக்கல் : இரு இலக்க (100க்கு அருகில் உள்ள) எண்கள்

பல வருடங்களாக எனக்கு நூறுக்கு அருகில் உள்ள எண்களை பார்த்தாலே எல்லா கணக்குகளும் குழம்பிவிடும். ஆனால் இந்த புது உத்தியை தெரிந்து கொண்டவுடன், நூறுக்கு அருகில் உள்ள எண்களைப் பார்த்தாலே ஒரு குஷி வந்துவிட்டது. இந்த உத்தி புரிந்துவிட்டால் நீங்களும் ஜாலியாகிவிடுவீர்கள்.

முதல் உதாரணம் : 96 x 97
  • முதல் எண் 96. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 96 =4
  • அடுத்த எண் 97. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 97 = 3
  • இனி விடைகளை பெருக்குங்கள். 4 x 3 = 12. இது விடையின் இரண்டாவது பகுதி
  • இப்போது 96ல் இருந்து மூன்றை கழியுங்கள் 96 - 3 = 93. அல்லது 97ல் இருந்து நான்கை கழியுங்கள் 97-4 = 93. இரண்டிற்கும் ஒரே விடைதான் 93. இது விடையின் முதல் பகுதி
  • அதாவது 9312
அடுத்த உதாரணம் : 98 x 92
  • முதல் எண் 98. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 98 =2
  • அடுத்த எண் 92. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 92 = 8
  • இனி விடைகளை பெருக்குங்கள். 2 x 8 = 16. இது விடையின் இரண்டாவது பகுதி
  • இப்போது 98ல் இருந்து எட்டை கழியுங்கள் 98 - 8 = 90. அல்லது 92ல் இருந்து இரண்டை கழியுங்கள் 92-2 = 90. இரண்டிற்கும் ஒரே விடைதான் 90. இது விடையின் முதல் பகுதி
  • அதாவது 9016
மூன்றாவது உதாரணம் : 96 x 99
  • முதல் எண் 96. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 96 =4
  • அடுத்த எண் 99. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 99 = 1
  • இனி விடைகளை பெருக்குங்கள். 4 x 1 = 5. ஐந்தை 05 எனக் குறித்துக் கொள்ளுங்கள். இது விடையின் இரண்டாவது பகுதி
  • இப்போது 96ல் இருந்து ஒன்றை கழியுங்கள் 96 - 1 = 95. அல்லது 99ல் இருந்து நான்கை கழியுங்கள் 99-4 = 95. இரண்டிற்கும் ஒரே விடைதான் 95. இது விடையின் முதல் பகுதி
  • அதாவது 9505
குறிப்பு :
இந்தப் முறையில் 95க்கு மேல் 100க்கு கீழே உள்ள எண்களை எளிதாக பெருக்கலாம். அப்போ மற்ற எண்களுக்கு என்ன செய்வதாம் என நீங்கள் கேட்பது புரிகிறது. காத்திருங்கள் விரைவில் அந்த உத்தியையும் சொல்லித் தருகிறேன்.

பயிற்சி எண்கள்
96 x 96 98 x 94 97 x 95 97 x 94
95 x 95 98 x 92 98 x 95 97 x 93

விசித்திர எண்கள்
6327. இந்த எண்ணை பார்க்கும் போதெல்லாம் எனக்கு வெஜிடபிள் சாண்ட்விட்ச் ஞாபகம் வரும். ஏன் தெரியுமா? நாள் சமோசா சாப்பிடும்போது, எக்மோர் அல்சாமா அருகில் வெஜிடபிள் சாண்ட்விட்ச் சுற்றிய காகிதத்தில் இந்த சுவாரசியமிருந்தது. எனக்கு சாண்ட்விட்சின் சுவையும் மறக்கவில்லை, 6327ன் சுவாரசியமும் மறக்கவில்லை.

6327 = 324 + 325 + . . . + 342 = 343 + 344 + . . . + 360.

9 comments:

யூர்கன் க்ருகியர் said...

ரொம்ப நன்றி ..அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்

Joe said...
This comment has been removed by the author.
கண்ணா.. said...

joe

99*99 = 9801 தான் வரும்

100 - 99 = 1

100 - 99 = 1

1*1 = 1

99 - 1 = 98

so...9801

கண்ணா.. said...

நல்ல உபயோகமான தகவல்.

நன்றி..

வேர்ட் வெரிபிகேஷனை நீக்கி விடவும்

Joe said...

The third example is incorrect, is what I wanted to say.

96 * 99 = 9504

Kanna,
Thanks for pointing it out.

Zubair siraji said...
This comment has been removed by the author.
Joe said...

96*99 = 9804.

Zubair siraji said...

100 - 99 = 1
இனி விடைகளை பெருக்குங்கள். 4 x 1 = 5. ஐந்தை 05 எனக் குறித்துக் கொள்ளுங்கள்.
இது எப்படி வந்தது? புரியவில்லை.

Zubair siraji said...

100 - 99 = 1
இனி விடைகளை பெருக்குங்கள். 4 x 1 = 5. ஐந்தை 05 எனக் குறித்துக் கொள்ளுங்கள்.
இது எப்படி வந்தது? புரியவில்லை.
kaniyuri@gmail.com