Wednesday, April 28, 2010

200க்கு அருகில் உள்ள எண்களை 3 வினாடிகளில் பெருக்குவது எப்படி?



200க்கு அருகில் உள்ள எண்கள்களை பெருக்கும்போது மனதில் இருக்க வேண்டியவை
  1. அடிப்படை எண் 100
  2. 200 = 100 x 2
  3. கொடுக்கப்பட்டிருக்கும் எண்களுக்கும் 200க்கும் வித்தியாசம் எத்தனை?
இது மூன்றும் மனதில் இருக்க வேண்டும்.

ஒரு உதாரணமாக 206 x 203 என்ன என்று பார்ப்போம்.

ஒரே ஒரு படம் போதும். அது ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பார்கள். அதனாலேயே ஆரம்பத்தில் நான் எழுத்துக்களை விட படங்களை நிறைய நம்பினேன். போகப்போக நேரமின்மை மற்றும் அலுப்பு காரணமாக படங்கள் தவிர்த்து எழுத்தால் மட்டுமே விவரித்தேன். இது சிலரை குழப்பி விட்டது, அல்லது ஆர்வத்தை குறைத்துவிட்டது என்று கருதுகிறேன். எனவே மீண்டும் படம் போட ஆரம்பித்திருக்கிறேன். இனி குழப்பம் குறையும், கணக்கில் ஆர்வம் அதிகரிக்கும்.





ஸ்டெப் - 1
கொடுக்கப்பட்டிருக்கும் இரு எண்களில் இருந்தும் 200ஐ கழியுங்கள். இது படு எளிது. அதனால் விளக்கம் தேவை இல்லை.

ஸ்டெப் - 2
கழித்து வந்த இரு எண்களையும் பெருக்குங்கள்
206 - 200 = 6
203 - 200 = 3
6 x 3 = 18
இது விடையின் முதல் பகுதி


ஸ்டெப் - 3
குறுக்கு வாட்டில் கழித்து வந்த இரு எண்களையும் கூட்டுங்கள்.
206 + 3 = 209
203 + 6 = 209
இரண்டும் ஒரே விடைதான் (எப்போதுமே அப்படித்தான் வரும்)




ஸ்டெப் - 4
அடிப்படை எண் 100. இந்த எண்ணை வைத்து 209ஐ பெருக்க வேண்டும். இதுவும் எளிது.
209 x 100 = 20900


ஸ்டெப் - 5
தற்போது கிடைத்திருக்கும் 20900ஐ இரண்டால் பெருக்க வேண்டும்.
20900 x 2 = 41800
இது விடையின் இரண்டாவது பகுதி


ஸ்டெப் - 6
விடையின் முதல் பகுதி 18
விடையின் இரண்டாவது பகுதி 41800
இரண்டையும் கூட்ட வேண்டும்.
41800 + 18 = 41818
விடை : 206 x 203 = 41818

11 comments:

Chitra said...

உங்கள் கிட்ட கணக்கு படிச்சிருந்தா, இப்போ நான் Reserve Bank or World Bank ல வேலை பார்த்துக்கிட்டு இருப்பேன். எளிய முறையில் நல்லா சொல்லி இருக்கீங்க. சூப்பர்!

Mythili (மைதிலி ) said...

இவ்வளவும் பாத்து பாத்து செய்யறதுக்குள்ளே நான் கடகடண்ணு ஒண்ணு ஒண்ணா பெருக்கி முடிச்சிடுவேனோ??

http://rkguru.blogspot.com/ said...

கணித மூளை......என்றும் நமக்கு இல்லை பள்ளி படிப்பில் கணக்கில் ஜஸ்ட் pass

உங்கள் எண்கணித மூளை அருமை...வாழ்த்துகள்

Anonymous said...

தமிழ் ப்ளாக் வழியாக ஆங்கில கூகிள் விளம்பரங்கள் வரவைக்கலாம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க கூகிள் வழியா
Free Google Adsense Training In coimbaotre Tamilnadu India
Free Web Design Training In coimbaotre Tamilnadu India
Free SEO Training In coimbaotre Tamilnadu India

RVS said...

கணக்கு பிணக்கு ஆமணைக்கு ன்னு பாரதி சொல்லி தப்பிச்சிட்டான். நம்மளாலே முடியாது. நல்லா சொல்லித்தரீங்க... கத்துப்போம்... நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

cheena (சீனா) said...

அன்பின் செல்வகுமார்

அருமையான எளிமையான வழி - மின்னல் கணிதம் கற்பிக்கமை நல்ல செயல் - நல்வாழ்த்துகள் - நன்றி - நட்புடன் சீனா

thiyaa said...

இந்த மரமண்டைக்கே புரியும் படி அழகான விளக்கம் அருமை

குணசேகரன்... said...

இத்தனை விஷயங்கள் இருக்கா? பகிர்வுக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

சிறந்த பயனுள்ள தகவல்களை அள்ளி வழங்கும் தங்களுக்கு
எனது மனபூர்வமான நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
சகோதரரே!...........

Prabu Krishna said...

வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

அசத்தும் ஆல்ரவுண்டர்கள்

Unknown said...

Oakwood drive to the same to you miss happy to help you miss happy to help you with the photographer and videographer and y