Saturday, October 3, 2009

18. மின்னல் பெருக்கல் : இரு இலக்க எண்கள். 70ஐ விட பெரிய 100ஐ விட சிறிய எண்களை பெருக்குவது எப்படி?

இதுவரையில் 90முதல் 100 வரையிலான எண்களை மட்டும் எப்படி மின்னல் வேகத்தில் பெருக்குவது எனப் பார்த்தோம். இது ரொம்ப ஈஸியா இருக்கு சார். இதே முறையை மற்ற எண்களுக்கும் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். இதற்கு ஏதாவது உத்தி இருக்கிறதா என்று சென்னை அரும்பாக்கத்திலிருந்து ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு மின்னஞ்சலில் கூறியிருந்த பதிலை அப்படியே இங்கு தருகிறேன்.

உதாரணம் : 1

88
92 X
---------
8096
---------


  • அடிப்படை எண் 100
  • 100லிருந்து 88ஐ கழித்தால் 12
  • 100லிருந்து 92ஐ கழித்தால் 8
  • 12ஐயும் 8ஐயும் பெருக்கினால் விடை 12X8 = 96.
  • இவை விடையின் முதல் பகுதி.
  • 88லிருந்து 8ஐ கழித்தால் 88-8 = 80.
  • அல்லது 92லிருந்து 12ஐ கழித்தால் 92-12 = 80.
  • 80ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 80 x 100 = 8000
  • இவை விடையின் இரண்டாம் பகுதி.
  • இனி விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும்.

8000 + 96 = 8096.
இது தான் விடை

உதாரணம் : 2

86
73 x
---------
6278
---------

  • அடிப்படை எண் 100
  • 100லிருந்து 86ஐ கழித்தால் 14
  • 100லிருந்து 73ஐ கழித்தால் 27
  • 14ஐயும் 27ஐயும் பெருக்கினால் விடை 14x27 = 378.
  • இது விடையின் முதல் பகுதி.
  • 86லிருந்து 27ஐ கழித்தால் 86-27 = 59.
  • அல்லது 73லிருந்து 14ஐ கழித்தால் 73-14 = 59.
  • 59ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 59 x 100 = 5900
  • இது விடையின் இரண்டாம் பகுதி.
  • இனி விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும்.

5900 + 378 = 6278.
இது தான் விடை

குறிப்பு :
அவ்வப்போது நாம் ஏற்கனவே பயன்படுத்திய உத்திகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக 14x27 இந்த எண்களை பெருக்க நேரும்போது நாம் ஏற்கனவே பயன்படுத்திய இரு இலக்க பெருக்கல் உத்தியை பாய்ச்சுங்கள்.

உதாரணம் : 3

98
83 x
---------
8134
---------

  • அடிப்படை எண் 100
  • 100லிருந்து 98ஐ கழித்தால் 2
  • 100லிருந்து 83ஐ கழித்தால் 17
  • 2ஐயும் 17ஐயும் பெருக்கினால் விடை 2x17 = 34.
  • இது விடையின் முதல் பகுதி.
  • 98லிருந்து 17ஐ கழித்தால் 98-17 = 81.
  • அல்லது 83லிருந்து 2ஐ கழித்தால் 83-2 = 81.
  • 81ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 81 x 100 = 8100
  • இது விடையின் இரண்டாம் பகுதி.
  • இனி விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும்.
8100 + 34 = 8134.
இது தான் விடை

செய்து பழகுங்கள்
71 x 84 = ?
83 x 99 = ?
76 x 85 = ?
89 x 93 = ?
77 x 95 = ?

No comments: