Sunday, October 11, 2009

20. மின்னல் ஸ்கொயர் ரூட்

குறிப்பு : 25ல் முடியும் எண்களுக்கு மட்டும் இந்த உத்தி பயன்படும்

போகப் போக மின்னல் கணிதத்தை எனக்குப் பதிலாக இதை வாசித்துக் கொண்டிருக்கின்ற மாணவ மாணவிகளே எழுதிவிடுவார்கள் என நினைக்கிறேன். எதனால் இப்படிச் சொல்கிறேன் என்றால் இந்த ஸ்கொயர் ரூட் உத்தியை நான் எழுதவில்லை. இந்த உத்தியை தானே கண்டுபிடித்து, பரிசோதித்து பின்னர் உதாரணங்களுடன் எழுதி அனுப்பியுள்ள மாணவியின் பெயர் ஆர்.வந்தனா. இவர் செயின்ட் ஆலொஷியஸ் ஆங்கிலோ இந்தியன் ஹையர் செகண்டரி பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

5ல் முடியும் எண்களை எப்படி ஸ்கொயர் செய்வது என முன்பு எழுதியிருந்தேன். அதை வாசித்துவிட்டு, பொழுதைப் போக்குவதாக நினைத்துக் கொண்டு, டிவி பார்த்து கண்ணைக் கசக்காமல், மூளையைக் கசக்கி ஸ்கொயர் ரூட்டுக்கு ஒரு மின்னல் டெக்னிக் கண்டுபிடித்திருக்கிறார். வாழ்த்துக்கள். இனி அவர் எழுதி அனுப்பியுள்ள உதாரணங்களைப் பார்க்கலாம்.

ஸ்கொயர் ரூட் கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்?
ஸ்டெப் - 1
எந்த எண்ணையும் இரு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.
725 என்றால் 7 மற்றும் 25
2025 என்றால் 20 மற்றும் 25
9025 என்றால் 90 மற்றும் 25
11025 என்றால் 110 மற்றும் 25
13225 என்றால் 132 மற்றும் 25
சுருக்கமாகச் சொன்னால் 25 ஒரு பகுதி. மற்ற எண்கள் இன்னொரு பகுதி.

ஸ்டெப் - 2
ஒரு எண்ணை தொடர்ச்சியான இரு எண்களின் பெருக்கல் தொகையாக (Factor) மாற்றத் தெரியவேண்டும்.
6 என்றால் 2 x 3
20 என்றால் 4 x 5
90 என்றால் 9 x 10
110 என்றால் 10 x 11
132 என்றால் 11 x 12
 
ஸ்டெப் - 3
25ல் முடிகின்ற எண்களின் ஸ்கொயர் ரூட்டை கண்டு பிடிக்கப் போகின்றோம். எனவே எப்போதுமே விடையின் வலது கடைசி இலக்கம் 5தான். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

உதாரணம் : 1
225ன் ஸ்கொயர் ரூட் = 15

•    225ஐ 2 மற்றும் 25 என பிரித்துக் கொள்ளுங்கள்
•    2 என்றால் 1 x 2
•    1 விடையின் இடது பகுதி
•    5 விடையின் வலது பகுதி
•    இரு பகுதிகளையும் இணைத்தால் 15. இதுதான் விடை

உதாரணம் : 2
625ன் ஸ்கொயர் ரூட் = 25

•    625ஐ 6 மற்றும் 25 என பிரித்துக் கொள்ளுங்கள்
•    6 என்றால் 2 x 3
•    2 விடையின் இடது பகுதி
•    5 விடையின் வலது பகுதி
•    இரு பகுதிகளையும் இணைத்தால் 25. இதுதான் விடை

உதாரணம் : 3
2025ன் ஸ்கொயர் ரூட் = 45

•    2025ஐ 20 மற்றும் 25 என பிரித்துக் கொள்ளுங்கள்
•    20 என்றால் 4 x 5
•    4 விடையின் இடது பகுதி
•    5 விடையின் வலது பகுதி
•    இரு பகுதிகளையும் இணைத்தால் 45. இதுதான் விடை

உதாரணம் : 4
9025ன் ஸ்கொயர் ரூட் = 95

•    9025ஐ 90 மற்றும் 25 என பிரித்துக் கொள்ளுங்கள்
•    90 என்றால் 9 x 10
•    9 விடையின் இடது பகுதி
•    5 விடையின் வலது பகுதி
•    இரு பகுதிகளையும் இணைத்தால் 95. இதுதான் விடை

உதாரணம் : 5

11025ன் ஸ்கொயர் ரூட் = 105

•    11025ஐ 110 மற்றும் 25 என பிரித்துக் கொள்ளுங்கள்
•    110 என்றால் 10 x 11
•    10 விடையின் இடது பகுதி
•    5 விடையின் வலது பகுதி
•    இரு பகுதிகளையும் இணைத்தால் 25. இதுதான் விடை

குறிப்பு :
மீண்டும் சொல்கிறேன். 25ல் முடிகின்ற எண்கள் என்பதால் எப்போதுமே விடையின் வலது பகுதி 5தான்.

இந்த மின்னல் டெக்னிக்கை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ள ஆர்.வந்தனாவைப் போல நீங்களும் புதுப்புது உத்திகளை முயற்சிக்கலாம். எளிதாக இருந்தால்  மின்னல் கணிதம் பகுதிக்கு எழுதி அனுப்பி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

14 comments:

blogpaandi said...

Good invention. All the best for that girl.

மங்களூர் சிவா said...

சூப்பர்.

வாழ்த்துக்கள் வந்தனா!

வரதராஜலு .பூ said...

Super Mathemagic.

என்னுடைய வாழ்த்துக்கள் வந்தனாவிற்கு

ஸ்ரீராம். said...

என் மகன் ராகுல் சொன்னது...
ஒரு மூன்றிலக்க எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். Any number. முதல் இலக்கத்திலிருந்து இரண்டைக் கழித்து மூன்றாம் எண்ணாக்குங்கள். நடுவில் உள்ள இரண்டாம் இலக்கம் முதல் இலக்கத்தை விடக் குறைந்த ஏதோ எண்ணாக இருக்கலாம். இப்போது கிடைத்த எண்ணை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போட்டு முதல் மூன்றிலக்க எண்ணிலிருந்து கீழே திருப்பிப் போட்ட மூன்றிலக்க எண்ணை கழித்து விடுங்கள். கிடைத்த விடையை மறுபடியும் திருப்பிப் போடுங்கள் இரண்டையும் கூட்டுங்கள். விடை எப்போதுமே 1089. அதே போல முதல் முறை கழிக்கும்போது விடை எப்போதுமே 198, திருப்பிப் போட்டால் 891! உதாரணம்...
533
335 (-)
--------
198
891 (+)
------
1089
-------

ISR Selvakumar said...

ஸ்ரீராம் சார்,
சுட்டிப் பையன் ராகுலுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

ராகுல் சொல்லியதை வைத்து அதே பாணியில் சில கணிதங்களை வரும் பதிவுகளில் எழுதலாமென்று தோன்றுகின்றது. பார்க்கலாம்!

ISR Selvakumar said...

சிறுவர் சிறுமியர்கள் நம்மை விட (சரி என்னை விட) வேகமானவர்கள், புத்திசாலிகள்.

சுட்டிகள் அனுப்பிய பல அசத்தல் கணக்குள் கை வசம் உள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகின்றேன்.

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

சூப்பர்!...பூங்கொத்து வந்தனாவுக்கு!

விக்னேஷ்வரி said...

ஐ, ரொம்ப நல்லாருக்கே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பயனுள்ள வலைப்பூ, தொடர்கிறேன் நன்றி:)

Ashok D said...

சின்ன வயசில இருந்து கணக்குன்னா ஒரு வித அலர்ஜி. உங்க சைட் அலர்ஜி cure பண்ணிடும்போல

(remove 'word verfication' sir)

எம்.எம்.அப்துல்லா said...

இப்படியெல்லாம் எனக்கு அந்தக் காலத்துல கணக்கு சொல்லிக் குடுத்துருந்தா...ஹூம்ம்ம்..

இப்பவும் காலம் கடக்கவில்லை, உங்க வலைப்பூவைத் தொடர ஆரமிச்சுட்டேன் :)

வேண்டுகோள் : அண்ணே, இந்த வேர்டு வெரிபிகேஷனை எடுத்துருங்க.இதுனாலயே நிறையபேர் பின்னூட்டம் போடமாட்டாங்க.

Buvaneswaran.S said...

Thank you !

Buvaneswaran.S said...

Thank you !